இன்றைய ராசிபலன் - 09.03.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, அரசாங்கத்துக்கு எதிராக எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க. லைசன்ஸ் இல்லாம கூட டூவீலர் ஓட்டாதீங்க. சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேபோல வேலை செய்யும் இடத்தில் மூன்றாவது நபரை பற்றி அனாவசியமாக வதந்திகளை பேச வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்ப்பது சிறப்பு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நெருக்கமான நண்பர்கள் உறவுகள் மூலம் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த விஷயத்திலும் வாக்குவாதம் செய்யக்கூடாது. பொறுமையாக அமைதியாக உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்த்தால் பிரச்சனைகள் இல்லை. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுக்கவும். மேலதிகாரிகள் இரண்டு ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் பொறுத்து செல்லவும். தொழிலில் வாடிக்கையாளர்களை எதிர்த்துக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். மன அழுத்தத்தோடு இருந்தால் மனதில் இருக்கும் பிரச்சனையை, ரொம்பவும் மனசுக்கு பிடித்தவர்கள் இடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நண்பர்களோடு அல்லது வாழ்க்கை துணையோடு உங்களுடைய பிரச்சனைகளை சொல்லும்போது அந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வு இன்னைக்கு கிடைக்கும். அதை விட்டு மனதில் பாரத்தை ஏற்றிக் கொள்ள வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. யாரை நம்பியும் பணம் காசு கொடுக்காதீங்க. ரொம்பவும் பாவமாக இருக்கிறது என்று உதவி செய்யப் போனால் அது உங்களுக்கு தான் பிரச்சனையை கொடுக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட தூர பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத வரவு பாக்கெட்டை நிரப்பும். வாரா கடன் வசூல் ஆகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் எல்லாம் உங்க நல்ல மனசையும் புரிந்து கொள்வார்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தொந்தரவை கொடுத்து வந்த கடன் பிரச்சனை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மன அழுத்தம் நீங்கும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். நிம்மதியாக பெருமூச்சு விடக்கூடிய நாள் இது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எது நல்லது, எது கெட்டது என்று சரியாக தீர்மானிக்க முடியாது. புதிய முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடவும். ஏதாவது அவசர தேவை என்றால் பெரியவர்களிடம் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள். அவசரப்பட வேண்டாம். முன் கோபப்பட வேண்டாம். இன்று நல்லது என்று தெரிவது, நாளை கெட்டதாக மாறும். இன்று கெட்டது என்று தெரிவது, நாளை நல்லதாக மாறும் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்படனும். நேரமும் காலமும் ஒரே மாதிரி இருக்காது.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத மாற்றம் நிகழும். அந்த மாற்றத்தின் மூலம் புது வரவுகள் காத்துக் கொண்டிருக்கிறது. புதுசா காண்ட்ராக்ட் கையெழுத்து போடுவீங்க. புதிய வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள். இதனால் இன்று அபரி விதமான வெற்றிகளும் உங்களுக்கு கிடைக்கும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனிதனில் சந்தோசம் இருக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கையும் இருக்கிறது. லாபம் நிறைந்த நாள் இது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்திற்கு சரியாக செய்து தர முடியாது. இதனால் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். தலை குனிந்து நிற்பீர்கள். கவலைப்படாதீங்க இது ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த அடுத்த வேலையை இனி சுறுசுறுப்பாக செய்யத் தொடங்குங்கள். கடின உழைப்பு உங்களுக்கு இன்று பெரிய வெற்றியைத் தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தை பற்றிய கவலை ரொம்பவும் பெருசாக இருக்கும். பிள்ளைகளை நினைத்து மனைவியை நினைத்து கஷ்டப்படுவீர்கள். அவர்களுக்கு இதனால் வரை எதுவுமே செய்யலையே என்று இன்னிக்கு உணருவீர்கள். இதனால் எதிர்காலத்துக்கு தேவையான சேமிப்பை உயர்த்துவதற்கு சில முயற்சிகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு நன்மையை கொடுக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து மாலை நேரத்தை கடந்து செல்வார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். கையில் இருக்கும் இருப்பு பணம் கரையும். இதனால் டென்ஷன் உண்டாக்கும். கோபப்படுவதால் எதுவுமே நடக்கப் போவது கிடையாது. அனாவசிய செலவை குறைக்க நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் மூலம் மனக்கவலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் போக்கில் பெற்றவர்கள் அக்கறை காண்பிக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் நிகழும். நீண்ட நாட்களாக போராடி வந்த பிரச்சனையில் வெற்றி காண்பீர்கள். வாரா கடன் வசூல் ஆகும். மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட இன்று நல்ல பெயரும் நல்ல வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.