இன்றைய ராசிபலன் - 08.03.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நம்பிக்கை பிறக்கும். தோற்றுப்போன காரியங்களில் எல்லாம் எப்படி வெற்றி அடைய சிந்தித்து செயல்படுவீர்கள். தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் உங்களுக்குள் தோன்றும். இதனால் புதுப்புது விஷயங்களை கத்துப்பீங்க. புதுப்புது வேலைகளை செய்வீங்க. நன்மை நடக்கக்கூடிய நாள் இது. கூடவே இன்று கோவிலுக்கு சென்று சிவபெருமானின் ஆசீர்வாதத்தையும் பரிபூரமாக பெற்றுக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் சரியாக செய்து முடிக்க முடியாது. இதனால் மேலதிகாரிகளிடம் சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் பொறுமை காக்கவும். தவறு உங்கள் பக்கம் இருந்தால், அதை சரி செய்ய பாருங்கள். நல்லது நடக்கும். மறக்காமல் இந்த சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு உங்களால் முடிந்த பொருளை வாங்கி கோவிலுக்கு தானம் கொடுங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த எதிரிகள் தானாக விலகுவார்கள். முன்னேற்றம் தரக்கூடிய இந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று மறக்காம வழிபாடு செஞ்சிருங்க. இன்னைக்கு சிவராத்திரி.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கஷ்டமான வேலைகள் எல்லாம் சுலபமாக மாறும். உங்களாலும் கஷ்டமான வேலையை செய்ய முடியும் என்பதை உணரக்கூடிய நாள் இது. தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். தைரியம் அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஊக்கத்தோடு எல்லா வேலையும் செய்யப் போறீங்க. சிவராத்திரி அன்று சிவனின் ஆசீர்வாதத்தை பெற மறக்காம கோவிலுக்கு போங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக இருந்தாலும், இன்றைய நாள் இறுதியில் பரபரப்பாக சில சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எல்லா வேலையும் மதியத்திற்கு முன்பாகவே, முன்கூட்டியே முடித்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு செல்லும்போது எந்த சிக்கலையும் உங்க கூட வச்சுக்காதீங்க. வேலை டென்ஷனை கொண்டு போய் வீட்டில் காண்பிக்க கூடாது. ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலை, என்று இரண்டு மணி நேரமாக இருக்கும் அவ்வளவுதான்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதுக்குப் பிடித்த சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை நிறைவாக முடித்துக் கொள்வீர்கள். அது மட்டும் அல்லாமல் உங்களுடைய வேலை, தொழில் எல்லாமே நல்லபடியாக செல்லும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். முழு நேரமும் வேலையை பார்க்காமல் கொஞ்சம் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்கினால் நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்க போகின்றது. மனது சந்தோஷமாக இருக்கும். குடும்பத்திற்காக நேரத்தை செலவு செய்வீர்கள். மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். சில பேருக்கு வேலையில் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் கூட இன்று சரியாகிவிடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நீண்ட நாட்களாக நடக்காமல் கிடப்பில் வைத்திருக்கும் பணிகளை இன்று கையில் எடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் இன்று சுலபமாக நடந்துவிடும். உங்களுடைய பேச்சாற்றல் அடுத்தவர்களை கவரும்படி இருக்கும். திறமையாக பேசி சில விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மந்தமான நாளாக இருக்கப் போகின்றது. எடுத்த வேலையை சரியாக முடிக்காமல் நேரத்தை நீங்களே வீணடித்து விடுவீர்கள். பின்பு இறுதியில் வேலை நடக்கவில்லை என்று நீங்களே டென்ஷன் ஆவீங்க. இன்று நேரத்தை கணக்கு போட்டு வேலை செய்யுங்கள். ப்ளான் பண்ணாமல் எதுவுமே பண்ணாதீங்க. அனாவசியமாக அடுத்தவர்களை மட்டும் குறை சொல்ல வேண்டாம். சிவன் கோவிலுக்கு காலையிலேயே போயிட்டு வந்துருங்க பிரச்சனையில் பாதி குறைஞ்சிரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. சம்பளம் வரலாம். இன்சென்டிவ் வரலாம். வாரா கடன் வசூல் ஆகலாம். கையில் பணத்தை வைத்து ஜாலியா செலவு பண்ண போறீங்க. சந்தோஷமா இருக்க போறீங்க. ஆனா சேமிப்பும் கொஞ்சம் முக்கியம். அதையும் ஒரு பக்கம் கவனியுங்கள். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். கூடாத நட்பை இந்த நேரத்தில் வச்சிக்காதிங்க. உங்க படிப்பை யாராவது ஒருத்தன் கெடுக்கிறான் என்றால் அவனை விட்டு ஒதுங்கி இருக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகமாக கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் நிறைய யோசிக்க போறீங்க. யோசிக்காமல் வேலை செய்யக்கூடிய தன்மை கொண்டவர்கள் நீங்கள். ஆனால் இன்று உங்களுடைய வேலை எல்லாவற்றையும் சிந்தித்து நிதானமாக செய்வீங்க. இதனால் நிதானமாக செய்வதன் மூலம் எத்தனை நன்மை வரும் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். நன்மை நடக்கக்கூடிய நாள் தான். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாளும் கூட.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மனதில் நினைச்சுப்பீங்க. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கிறது. ஒருநாள் கூட சந்தோஷமா வாழ முடியல. அடுத்த நாள் பின்னாடியே பிரச்சனை வருகிறது என்று வாழ்க்கையை கடந்து செல்லக்கூடிய சூழல் இன்று உண்டாகும். எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் ஒரு பக்கம் ஜாலியும் உங்களுக்கு இருக்கும். கஷ்டத்தை கலந்து செல்லக்கூடிய தெம்பை கடவுள் உங்களுக்கு கொடுத்திடுவார். மறக்காம காலையில கோவிலுக்கு போய் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை வாங்கி விட்டு பின் வேலையை தொடங்கவும்.