இன்றைய ராசிபலன் - 06.03.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையையும் சரியாக முடிக்க வேண்டும் என்று தான் நினைப்பீர்கள். ஆனால் காலமும் நேரமும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஏதாவது ஒரு பிரச்சனை வந்து தடையாக நிற்கும். பிரச்சனையை சரி செய்வதற்குள் உடல் அசதி ஏற்படும். மனசோர்வு ஏற்படும். இதனால் வேலையில் சின்ன சின்ன பின்னடைவுகள் உண்டாகும். எல்லா நாளும் வெற்றி கொடியை நாட்ட முடியாது அல்லவா. இன்று வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க பொறுமையாக இருக்கணும். திறமையாக சிந்திக்கணும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், வாழ்க்கை போன போக்கில் நீங்களும் போயிருங்க. அடம்பிடித்து இதை மாற்ற வேண்டும் அதை மாற்ற வேண்டும் என்று நிற்காதீர்கள். அது உங்களுக்கு பிரச்சனையை தான் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் அதை சரி செய்வதற்கு உண்டான வழியை மட்டும் தேடணும். சிக்கல் வந்த காரணத்தை அடுத்தவர்களுக்கு சொல்லி புரிய வைக்க நினைக்காதீர்கள். இன்று உங்களுடைய பேச்சைக் கேட்க யாருமே தயாராக இருக்க மாட்டாங்க பாத்துக்கோங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்து வந்திருந்த சக ஊழியர்கள் கூட இன்று உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதியை பெறுவீர்கள். தொழிலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான முதலிடம் கடனாக கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மனசு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். எப்போதுமே உங்களை சுற்றி பத்து பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்வீர்கள். ஆசைப்பட்டதை எல்லாம் நடத்தி காட்டுவீர்கள். வெற்றி வாகை சூடக் கூடிய நாள் இது. மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் இன்று உயரும். சந்தோஷத்தில் அன்றாட வேலையை கோட்டை விட்டுடாதீங்க. அதையும் சரியா பாத்துக்கோங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வளவு பெரிய நல்லது நடந்தாலும் மனசு திருப்தி அடையாது. இன்னும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருக்கும். புதுசா ஏதாவது கத்துக்கணும் புதுசா ஏதாவது வாங்கணும் என்று யோசித்துக்கொண்டே இருக்க போறீங்க. இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் எல்லா விஷயத்தையும் ஒரே நாளில் சாதிக்க முடியாது அல்லவா. எதுக்கும் ஆர்வக்கோளாறு அப்படியே கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் ஆசையை அடக்கி கொள்ள வேண்டும். பேராசை உங்களுக்கு பெரும் நஷ்டம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிறைய காசு பணம் செலவு செய்யாதீங்க. அதிக விலை கொடுத்து எந்த ஒரு பொருளையும் வாங்காதீங்க. பணத்தை பர்ஸிலிருந்து எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். இல்லை என்றால் சின்ன சின்ன இழப்புகள் சின்ன சின்ன கஷ்டத்தை கொடுக்கும் பாத்துக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். யாராலும் செய்ய முடியாத வேலையை ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தின் காரணமாக நீங்கள் செய்து முடித்துவிடுவீர்கள். இதனால் பாராட்டும் கிடைக்கும். அடுத்தவர்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்தால் மனசு சந்தோஷமாக ரக்கை கட்டி பறக்கும் அல்லவா. அடிக்கிற வெயில்லயும் நீங்க ஜில்லுனு இருக்க போறீங்க. இந்த நாளை என்ஜாய் பண்ணுங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எந்த வேலையும் அவ்வளவு லேசாக நடந்து முடியாது. எல்லா வேலைகளிலும் இழுபறியாக இருக்கும். முக்கியமான அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலை, வேறு ஏதாவது முக்கியமான வேலை இருந்தாலும் அதை நாளை தள்ளி போட்டுக்கோங்க. அன்றாட வேலையில் மட்டும் இன்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணையின் உதவி உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். நண்பர்களுடன் சண்டை, மனைவியுடன் சண்டை, வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சண்டே இல்லாமல் இந்த நாளை கடந்து செல்ல வேண்டும் என்றால் எல்லா விஷயத்தையும் சகித்துக் கொள்ளவும். முன்கோப படக்கூடாது. யாராவது உங்களை கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டினால் கூட அமைதியாக போகணும். முடியுமா உங்களால். முடிந்தால் இன்று பிரச்சனை இல்லை. கோபம் வந்தால் கொஞ்சம் ரணகளமாகத் தான் இன்றைய நாள் செல்லும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று நல்லது நடக்கக்கூடிய நாள். புதிய மனிதர்களின் சந்திப்பு முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தால், அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகளை நிராகரிக்காதீர்கள். தொழிலில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளும் கிடைக்கும். அதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் கைக்கூடி வரக்கூடிய நாள் எது? புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எந்த வேலையிலும் அதிகமான ஆர்வம் இருக்காது. கடமைக்காக எல்லா வேலையையும் செய்யக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இதனால் மனசோர்வு உடல் சோர்வு ஏற்படும். தொழிலில் பெருசாக பிரச்சனை இல்லை. எப்போதும் போல வியாபாரம் நடக்கும். எப்போதும் போல லாபம் இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவும். மனைவியுடன் சண்டை போடாதீங்க வாக்குவாதம் செய்யாதீங்க
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை சமாளிக்கவே முடியாது. குறி வைத்து நம்மையே தாக்குவார்கள். டார்கெட்டை முடித்தாலும் பிரச்சினை, டார்கெட்டை முடிக்காட்டாலும் பிரச்சினை. என்னதான் செய்வது என்று சில பேருக்கு திண்டாட்டம் இருக்கும். கவலைப்படாதீங்க நேரமும் காலமும் கைகூடும் வரும் வரை பொறுமையாக இருக்கவும்.