இன்றைய ராசிபலன் - 05.03.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவு கஷ்டமான வேலையை கொண்டு வந்து கையில் கொடுத்தாலும் அதை சுலபமாக செய்து முடிப்பீர்கள். திறமை வெளிப்படும். பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கும் சில பேருக்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நிதிநிலைமை சீராக இருக்கும். மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத மன குழப்பம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யாதீங்க. அவர்கள் என்ன சொன்னாலும் சரி என்று தலையாட்டிக் கொள்ளுங்கள். இன்று பிரச்சனை செய்வது நல்ல தீர்வை கொடுக்காது. அமைதியாகப் போனால் தான் நன்மை நடக்கும். வியாபாரத்தில் லாபம் கொஞ்சம் முன் பின் தான் இருக்கும். தொழிலாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் கட்டளை இடாதீர்கள். அன்போடு சொல்லுங்க நல்லதே நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் ஒளிவு மறைவு இருக்காது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சில நல்லதும் நடக்கும். சில எதிரிகளும் உருவாகுவார்கள். நேர்மையாக நடந்தால் அது பிரச்சனை தானே. ஆனால் நேர்மை தவறாமல் நடப்பது எதிர்காலத்திற்கு நல்லது. மடியில் கனமில்லை, என்றால் வழியில் பயம் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். மனது நிம்மதி பெரும். இரவு நல்ல தூக்கம் வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்வதில் மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. கட்டுமான தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு டார்கெட் பிரச்சனை இருக்கும் பார்த்துக்கோங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உங்களை புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணை, உங்களை புரிந்து கொண்டு, உங்களிடம் நல்லுறவு பகழகுவார்கள். இதனால் மனது நிம்மதி அடையும். சந்தோஷம் பெருகும். இழுபடியாக இருந்து வந்த சொத்து பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். கடன்காரர்கள் வந்து கழுத்தை நெறிப்பார்கள். பணத்தை புரட்ட முடியாமல் கொஞ்சம் திண்டாட்டம் இருக்கும். யாருக்காவது நீங்கள் கடன் கொடுக்க வேண்டியதாக இருந்தால், அவர்களை முன்கூட்டியே அழைத்து, இப்போது என்னால் பணத்தை புரட்ட முடியாது இன்னும் கொஞ்ச நாள் கழித்து திருப்பி தருகிறேன் என்று நீங்களே சொல்லிடுங்க. கடன் காரர்களை கண்டு நீங்கள் இன்ற தலைமறைவானால் பிரச்சினை பெருசாகும் பார்த்துக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் முக்கியமான முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடவும். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் அடுத்தவர்களை நம்பி முழுசாக பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். பாட்னரையும் முழுசாக நம்ப வேண்டாம். கணக்கு வழக்குகளை பரிவர்த்தனையை நீங்களே அமர்ந்து ஒரு முறை சரி பார்ப்பது நன்மையை கொடுக்கும். நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்காதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தினமும் வேலை காலை 9 மணிக்கு தொடங்கும் என்றால், இன்று அந்த வேலையை நீங்கள் 8 மணிக்கே தொடங்கி விட வேண்டும். எல்லா விஷயத்திலும் தாமதமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் மேல் இடத்தில் திட்டு வாங்குவீங்க. பார்த்துக்கோங்க குறிப்பா தேர்வு எழுத போகக்கூடிய மாணவர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனம் செலுத்தவும். அரை மணி நேரம் முன்கூட்டியே பள்ளிக்கூடம் கிளம்புவதில் தவறு ஒன்றும் கிடையாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று எவ்வளவு தான் உழைத்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது. அதற்காக வேலையை செய்யாமல் இருந்தால் நல்லா இருக்குமா. உங்களுடைய தினசரி வேலையை செய்யுங்கள். அதற்கான பாராட்டும் புகழும் இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் உங்களை தேடி வரும். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட இன்று நல்லது நடக்கும். கல்லா நிரம்ப பணம் சேரும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் முன் கோபப்படக்கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். அவசரமாக வார்த்தைகளை கொட்டி விட்டால், பின்பு அல்ல முடியாது. குறிப்பாக மாமியார் மருமகள் உறவு, நாத்தனார் உறவுகளோடு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட உறவுகளிடம் நல்லா பேசினாலே சண்டை வரும். நீங்க சண்டை போடும்படி பேசினால் இன்னும் விவகாரம் ஆயிரம் பாத்துக்கோங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இரண்டு பேர் வேலையை உங்க தலையில் கட்ட போறாங்க. இதனால் டென்ஷன் ஆக்குவீங்க. ஆனா கோபத்தை வெளி காட்டக் கூடாது. மேனேஜரிடம் பொறுமையாக தான் பேச வேண்டும். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு என்பதை மனதில் நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். செலவை குறைக்கணும். ஆடம்பர செலவு உங்களுக்கு ஆபத்தை கொடுக்கும் பார்த்துக்கோங்க.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு வேலையாக வேண்டும் என்றால், நாம் கொஞ்சம் பணிவாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். கோபப்பட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் நஷ்டம் ஏற்படுவது நமக்குத் தான். பொறுமை காக்கவும். நமக்கென்று ஒரு நேரம் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்று தான் ஆக வேண்டும். புதிய வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்பவன் புத்திசாலி. வியாபாரத்தில் கொஞ்சம் பின்னடைவு இருந்தாலும் கூடுதல் உழைப்பை முதலீடாக போட்டால் முன்னேற்றம் வரும்.