Monday, 4 March 2024

இன்றைய ராசிபலன் - 04.03.2024..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று தோல்விகளை கண்டு பயப்படக்கூடாது. சில முயற்சிகளில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதில் வெற்றி அடைவதற்கு உண்டான வழியை தேடுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு வேலை செய்யுங்கள். மேலதிகாரிகளுக்கு பயந்து, பேசாமல் இருக்காதீங்க. மனதில் பட்டதை பேசுங்க நேர்மையாக பேசுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை சேர்க்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். உங்க தெருவில் நீங்கள் நடந்து போனா நாலு பேரு பார்த்து கும்பிடும் அளவுக்கு நல்ல காரியங்கள் செய்யப் போறீங்க. அதற்கேற்றது போல பெரிய மனசு குணமும், பெருந்தன்மையும் உங்களிடத்தில் இருக்க வேண்டும். சிலரை தனமாக சில விஷயத்தை செய்யாதீங்க. பெரிய மனுஷத்தனம், பெருந்தன்மை, விட்டுக் கொடுப்பது போன்ற குணம் உங்களுக்கு இன்று பெரிய அளவில் பாராட்டை தரும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக பார்க்காத நட்பு, நீண்ட நாட்களாக பிரிந்த கணவன் மனைவி கூட, ஒன்று சேரலாம். சந்தோஷம் நிறைந்த நாள். குடும்பத்தில் நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. செய்ய வேண்டிய வேலை எல்லாம் சரியாக செய்து முடித்து விடுவீர்கள். உங்களை கை நீட்டி யாரும் குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பக்காவா உங்க வேலையை முடிப்பீங்க. சந்தோஷம் நிறைந்த நாள் இது. அடுத்தவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனசு கவலையாக இருக்கும். துயரத்தோடு இருக்க போறீங்க. ஆனா பிரச்சனை என்று பார்த்தால் சுட்டிக்காட்ட ஒன்று கூட இருக்காது. சில சமயம் நம்ம சொல்லுவோம் இல்லையா. மனசே சரி இல்ல என்று. அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு இன்று வரலாம். ஆனால் அன்றாட வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். காலையிலேயே வேலைக்கு கிளம்புவதற்கு முன்பு பிள்ளையாரை கும்பிட்டுக்கோங்க நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய திறமைகள் வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் புகழ்ச்சிதான் கிடைக்கப் போகின்றது. இப்படி எதிர்பாராத புகழ்ச்சி கிடைக்கும்போது, தானாக நமக்கு தலைகனம் ஏறும். அப்போது நீங்கள் உங்களுடைய தன்னடக்கத்தை காண்பியுங்கள். நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கும். புகழ்ச்சியை கண்டு மயங்காதவன் தான் வாழ்க்கையில் முன்னேறுவான்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் செய்யலாம். புது வேலை தேடுவது, புது வீடு பார்ப்பது, புதுசா ஏதாவது பொருள் வாங்கணும்னா வாங்கலாம். லாபகரமாக அமையும். யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. உஷாராக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆக்கபூர்வமான நாள் இது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சங்கடங்கள் இருக்கும். என்னடா இது முயற்சி செய்தால், நல்லது நடக்கலையே, தோத்து போயிட்டோமே என்று ஃபீல் பண்ணுவீங்க. எவ்வளவுதான் உழைத்தாலும் வேலையில் நல்ல பெயர் கிடைக்காது. தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். நீங்கள் நல்லதுக்கே சில விஷயங்களை பேசினாலும் எதிராளி கெட்டது என்று தான் சொல்லுவார்கள். இப்படி நிறைய சங்கடங்களை சுமக்க கூடிய நாள் இது. கவலைப்படாதீங்க எல்லாம் சரியாயிடும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் இதனால் நல்ல முன்னேற்றமும் பாராட்டும் உண்டாகும். உங்களை மக்கு என்று நினைத்தவர்கள் எல்லாம், உங்கள் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்வார்கள். இல்லற வாழ்க்கை இனிக்கும். நீண்ட தூர பயணம் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. ஏதாவது திருட்டு போவதற்கு மட்டும் கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய வேலையும் சேர்த்து நீங்களே செஞ்சிருவீங்க. அந்த அளவுக்கு பரபரப்பாக இருக்க போறீங்க. துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகக்கூடிய நாள். வீட்டில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர கூடிய நாள். மகிழ்ச்சியை இரட்டிப்பாகும். உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுடைய நல்ல குணத்தை புரிந்து கொள்வார்கள். சந்தோஷம் பெருகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வாழ்க்கையில் எதிர்காலத்துக்கு தேவையான சில நல்ல விஷயங்களை செய்வீர்கள். பிள்ளைகளால் மனது சந்தோஷம் அடையும். நீண்ட நாள் பகை விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு ப்ரமோஷன் கிடைக்கக்கூட வாய்ப்பு இருக்கு. வேலையில் மட்டுமல்ல உறவிலும் தான். வீட்டில் சுப செலவும், சுப காரிய செய்திகளும் இருக்கும் என்ஜாய் பண்ணுங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். சில கடமைகளை இன்றே முடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். அதை எல்லாம் செய்ய இன்று காலை முதலிலே உங்களுக்கான டென்ஷன் தொடங்கிவிடும். கவலைப்படாதீங்க இந்த நாள் இறுதியில் உங்கள் கடமையை சீராக முடித்து இருப்பீர்கள். நல்ல பெயரும் வாங்கியிருப்பீங்க. ஆனால் கொஞ்சம் கூட சோம்பேறித்தனம் படாமல் இந்த நாள் வேலை செய்யணும்.
SHARE