Tuesday, 5 March 2024

இந்த வார ராசிபலன் 04/03/2024 முதல் 10/03/2024 வரை..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுசரித்து செல்லக்கூடிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய முயற்சிகள் எதிலும் இந்த வாரம் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்ட வந்தாலும் அவர்களிடம் அளவோடு பழகி கொள்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மூன்றாவது நபரிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வீர்கள். அந்த முயற்சியும் வெற்றி பெறும். புதிதாக எந்த தொழிலிலும் அதிக அளவு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகள் நீங்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் இருந்து வந்த உபாதைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்காலம் சார்ந்த சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலமும் வேலையில் கவனம் செலுத்துவதன் மூலமும் நன்மைகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். கூடுதலாக உழைப்பதன் மூலம் எதிர்பாராத பண வரவையும் ஏற்படுத்த முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் இருந்து வந்த உபாதைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை உண்டாக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு உடன் பணிபுரிபவர்களிடமும் எச்சரிக்கையுடன் செயலாற்றினால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் அதிகரிக்கும். இதுவரை தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிரிகள் படிப்படியாக குறைய ஆரம்பிப்பார்கள். இருப்பினும் தொழில் ரீதியாக தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகிழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தேவையற்ற மன சஞ்சலம் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலையை சரியாக செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்று எதிர்பார்த்த சலுகைகளையும் பெறலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிரிகள் நீங்குவார்கள். அதனால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். பணப்பரிவர்த்தனை செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் செய்வது நன்மையைத் தரும். முதலீடுகள் செய்யும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

வேலையைப் பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சிறிது சிரமமாக இருக்கும். மறைமுக எதிரிகளின் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாமர்த்தியமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும் என்றாலும் அதற்கு இணையான அளவிற்கு செலவுகளும் ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். வேலை ரீதியாக எந்த ஒரு முடிவையும் இந்த வாரத்தில் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதாயம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதேசமயம் செலவுகளும் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவது பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். திருமணம் முயற்சி வெற்றியைத் தரும்.

வேலையை பொருத்தவரை புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்ற வாரமாக இந்த வாரம் திகழும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எந்த ஒரு முடிவையும் குழப்பமான மனநிலையுடன் எடுக்காமல் சிறிது நேரம் காலம் தாழ்த்தி எடுத்தால் நல்ல முடிவாக எடுக்க முடியும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அந்த வேலையை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளையும் பாராட்டையும் பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மறைமுக எதிரிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயலாற்ற வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்பாமல் தானே தன்னுடைய வேலையை செய்வது நன்மையை தரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க காலதாமதம் ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. தொழிலை முன்னேற்றுவதற்கு செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயம் செலவுகளும் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். வீண் விரயங்களை தவிர்ப்பது நன்மையைத் தரும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பித் தருவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறப்பட செய்து முடித்து வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் தொழில் ரீதியாக எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்காமல் தக்க ஆலோசகரிடம் ஆலோசனை செய்த பிறகு எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
SHARE