இன்றைய ராசிபலன் - 03.03.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் சிதற கூடாது. வெளியிடங்களுக்கு செல்வதாக இருந்தால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை இன்று தவிர்த்துக் கொள்ளவும். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்பாதீங்க. தனியா ட்ராவல் பண்ணீங்கன்னா, உங்க கூட வரவங்கள முழுசா நம்பிராதிங்க. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. மற்றபடி வேலை தொழில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். இதனால் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கூடுமானவரை முக்கியமான முடிவை நாளை தள்ளிப் போடுங்கள். வேலை செய்யும் இடத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். தொலைபேசியின் மூலம் சண்டை, தொந்தரவு சில பேருக்கு வரும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. தொலைபேசி உங்களுக்கு இன்று தொல்லை பேசியாக மாறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்க போகின்றது. நல்லா சாப்பிட்டு, நல்லா ஓய்வு எடுக்க போறீங்க. விருந்தாளிகளின் வருகை மனதிற்கு மன சந்தோஷத்தை கொடுக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. செலவுக்கு எந்த குறையும் வராது. ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்க போகின்றது. அடுத்த இரண்டு நாளுக்கு தேவையான வேலையை முன்கூட்டியே இன்று செய்து விடுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று சும்மா உட்கார மாட்டீங்க. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இரண்டு மடங்கு இன்று சுறுசுறுப்பு அதிகமாக இருக்கப் போகின்றது. நல்லது நடக்கக்கூடிய நாள். சந்தோஷம் இருக்கக் கூடிய நாள். எந்த பிரச்சனையும் இல்லாத நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். இன்றைக்குத்தான் பிறந்தது போல ஒரு உணர்வு உங்களுக்குள் வரும். குழந்தை போல சந்தோஷமாக இந்த நாளை கடந்து செல்வீர்கள். செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில பேருக்கு சம்பளம் வந்தும் பற்றாக்குறை பட்ஜெட் ஓடும். பண பிரச்சனையில் சிக்க வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. சொந்த பந்தங்களோடு சண்டை, கணவன் மனைவி வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை பொறுமையாக இருங்கள். உறவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். முன்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகள் ஏதாவது பேசினால் கொஞ்சம் அமைதியாக கேட்டுக் கொள்ளவும். குறுக்க குறுக்க பேசாதீங்க. பேசாமல் இருந்தால் இன்று உங்களுக்கு நன்மை நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முயற்சிகளை எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நல்ல காரியத்திற்கு முயற்சி எடுக்கலாம். தடைகள் வந்தால் துவண்டு போகக்கூடாது. சரி, இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே அமைதியாக விட்டுவிடுங்கள். மற்றபடி வேலை தொழில் எல்லாம் சுமூகமாகச் செல்லும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ள வேண்டும். வாகனங்களில் பயணம் செல்லும் போதும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வாகனம் ஓட்டும் போது ஜாக்கிரதையா இருங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். எந்த வேலையை எப்படி செய்ய முடிப்பது என்று கொஞ்சம் திண்டாடுவீர்கள். வீட்டு வேலை, அலுவலக வேலை இப்படி எல்லாம் பின்னிப்பினையும் போது கொஞ்சம் டென்ஷன் வரும். ஞாயிற்றுக்கிழமை கூட உருப்படியாக தூங்க முடியவில்லை என்று வருத்தப்படுவீர்கள். கவலைப்படாதீங்க ஞாயிற்றுக்கிழமையும் கஷ்டப்படும் போது தான் அடுத்த 6 நாட்கள் உங்களுடைய வாழ்க்கை சிக்கல் இல்லாமல் போகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களை குறை சொல்லிக்கிட்டே இருக்க போறீங்க. உங்களைப் போலத்தான் அடுத்தவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். நீங்கள் பொய் சொல்ல மாட்டீங்க, நீங்க குறுக்கு வழியில் போக மாட்டீங்கான, அடுத்தவர்களும் அப்படி இருப்பாங்க என்று எதிர்பார்ப்பது ரொம்ப ரொம்ப தப்பு. இதனால் எதிரி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உலகம் போன போக்கில் நாமும் போவதுதான் சரி. நாம மட்டும் தனியாக ஒரு பாதையில் போனால் பைத்தியக்காரன் என்று சொல்லிடுவாங்க பாத்துக்கோங்க. அதுக்காக நீங்க குறுக்கு வழியில் போகாதீங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க.
மகரம்
மகர ராசி காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. எல்லா வேலையும் தூக்கி ஓரம் வச்சிருவீங்க. பிரச்சனை வரும். வந்தாலும் கவலைப்பட மாட்டீங்க. நல்லா தூங்கி, நல்லா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுக்க போறீங்க. என்ஜாய் பண்ணுவீங்க. இன்று மாலை நேரத்தில் கொஞ்சம் காசு செலவு ஆகும். பர்ஸ் காலியாகும். சம்பளம் வந்தா எல்லாம் சரியாகிவிடும்.
கும்பம்
கும்ப ராசி காரர்களுக்கு இன்று ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும். எல்லா வேலையும் ஒரே நாளில் முடித்துவிட்டு, ஒரே நாளில் நல்ல பெயர் கிடைக்க போராடி பார்ப்பீர்கள். ஆனால் அது சாத்தியம் கிடையாது. கெட்ட பேர் வர ஒரு நொடி போதும். நல்ல பெயர் எடுக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். அதை நீங்கள் இன்று உணர்ந்து விடுவீர்கள். நிறைய நல்ல அனுபவ பாடங்கள் கிடைக்கக்கூடிய நாள் உங்களுக்கு. தவறுகளை செய்தால் ஒற்றுக் கொள்ளுங்கள். நான் தவறே செய்யவில்லை என்று வாக்குவாதம் செய்யாதீங்க அது அழகும் அல்ல.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். சில பேருக்கு உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ரொம்ப நேரத்துக்கு ஜீரணம் ஆகாமல் இருக்கக்கூடிய பொருட்களை சாப்பிடாதீங்க. லேசான உணவுகளை சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வயிறு உபாதைகள் தொந்தரவை கொடுக்கலாம். டென்ஷன் டென்ஷன் டென்ஷன் என்று இருந்தால் இப்படித்தான் பிரச்சனை வரும். கொஞ்சமாக மனதை ரிலாக்ஸ் ஆக வச்சுக்கோங்க. பொறுமையா இருங்க நல்லது நடக்கும்.