இன்றைய ராசிபலன் - 02.03.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்கள் மதிக்கத்தக்கும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகளும் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மை நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சகோதர சகோதர் உறவுகள் பலப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். அலுவலகப் பணியில் சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதை தளர விடாமல் முயற்சி செய்தால் வெற்றி காண்பீர்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தவும். பொறுப்புகளை முழுசாக அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்க வேலைய நீங்க கொஞ்சம் கூடுதல் பொறுப்போடு கவனித்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் முன்கூட்டியே பிளான் பண்ணிடுங்க. கடைசி நிமிடத்தில் அவசரமாக ஒரு வேலையை செய்யக்கூடாது. வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். கொஞ்சம் கவனத்தோடு செயல்பட்டால் பிரச்சனைகளை சரி செய்து விடலாம். பாதிப்புகள் எதுவும் இருக்காது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். குடும்பப் பெண்மணிகள் உறவுகளை அனுசரித்து செல்லவும். யாரிடமும் சண்டை போடக்கூடாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியாது. சொன்ன வாக்கை காப்பாற்றாமல் போக வாய்ப்புகள் உள்ளது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலையை செய்வதால் வரக்கூடிய பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. வெற்றிக்கான கூடிய நாள் இது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. சில பேருக்கு வருமானத்தை விட இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வந்த சம்பளம், வந்த வழியே காணாமல் போயிருக்கும். இதனால் அதிர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீங்க. கொஞ்சம் சேமித்து வையுங்க. அது எதிர்காலத்திற்கு நன்மையை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக செலவு இருக்கும். சில பேருக்கு சம்பளமே வந்து இருக்காது. இதையெல்லாம் சமாளிக்க, கொஞ்சம் திணறுவீர்கள். இருந்தாலும் பிரச்சனை கிடையாது. இன்று மாலை உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக செல்லப் போகின்றது. காசு இருந்தால் ஒரு சந்தோஷம். காசு இல்லாட்டியும் ஒரு சந்தோஷத்தை நீங்களே தேடிபிங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாள் தொல்லை கொடுத்து வந்த உடல் ஆரோக்கிய பிரச்சனை சரியாகிவிடும். கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக சில நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சண்டை சச்சரவுகள் வீடு தேடி வரும். நீங்கள் சும்மாவே இருந்தாலும் பிரச்சனை உங்களை சும்மா விடாது. அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. யாரையும் முழுசா நம்பாதீங்க. உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை அனாவசியமாக மூன்றாவது மனிதரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதுவாக இருந்தாலும் மனசுக்குள்ளேயே இருக்கட்டும். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடந்தால் நன்மை நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலையில் ஆர்வம் அதிகமாக காட்டுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் வங்கியில் கணக்கு தொடங்குவது, ஃபிக்சட் டெபாசிட் போடுவது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்வதன் மூலம் உங்களுடைய மனசு நிம்மதி அடையும். வியாபாரத்தில் முதலீட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பது நன்மை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒன்றாக சேர்த்து நீங்களே செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டிருந்த வேலையை இன்று கையில் எடுத்தால் நல்லபடியாக நடந்து முடியும். நிதி நிலைமை சீராக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். புதுசாக முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் அக்கறை காட்ட மாட்டீர்கள். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் பார்த்துக்கோங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். எதுவாக இருந்தாலும் இன்று நீங்கள் பொறுமையாக பேச வேண்டும். மேலதிகாரிகளுக்கு மதிப்பு கொடுங்கள். வார இறுதி நாள் என்பதால் சில அலுவலகத்தில் மீட்டிங் எல்லாம் வைப்பாங்க. அந்த சமயத்தில் கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும். சக ஊழியர்களை முழுசாக நம்பாதீங்க. குறுக்கு வழியில் போக முயற்சி செய்யாதீர்கள். எதுவாக இருந்தாலும் நேர்மையாக இருக்கவும்.