Friday, 1 March 2024

இன்றைய ராசிபலன் - 01.03.2024..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று தைரியத்தோடு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு இன்று வெற்றியைத்தான் கொடுக்கும். கஷ்டமான வேலையை கூட ஈஸியா முடிச்சுட்டு போற அளவுக்கு நல்ல நேரம் உங்களுக்கு கை கூடி வந்து இருக்கிறது. வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். எதிரிகளிடம் கூட பாராட்டுகளை பெரும் அளவுக்கு சில நன்மைகள் இன்று நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. மனது நிம்மதியாக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இதுநாள் வரை பிரச்சினையாக இருந்து வந்த சம்பவங்களை, சுலபமாக சரி செய்து விடுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். இதனால் உங்களுக்கான செல்வாக்கு பலரது மத்தியில் உயர்ந்து நிற்கப் போகின்றது. காலரை தூக்கிவிட்டு நடக்கலாம். சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நிதி நிலைமை சீராக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பிரச்சினையை கொடுத்து வந்தவர்கள், நண்பர்களாக மாறிவிடுவார்கள். இல்லை என்றால் வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிப் போய்விடுவார்கள். ஆனால் பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். நன்மை நடக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாள் முயற்சி வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடக்கவும். அடம் பிடித்து எந்த விஷயத்துக்கும் வாக்குவாதம் செய்யாதீர்கள். தொழிலில் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பெண்கள் சமையல் அறையில் சமைக்கும் போதும் கவனத்தோடு இருந்துக்கோங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையிலும் அதிக ஆர்வம் காட்டுவீங்க. என்னால் இந்த வேலையை செய்ய முடியாது என்று பின்வாங்க மாட்டீங்க. இதனால் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்வதில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கவும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் உஷாராக இருங்க. யாரையும் நம்பி ஏமாறாதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சங்கடங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. சின்ன சின்ன தோல்விகளும் வரும். அதை கண்டு துவண்டு போகக்கூடாது. வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல்படுவோம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கு கைநீட்டி அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் இருக்கும் இடர்பாடுகளில் இருந்து வெளிவர நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களை கூட பகையாக்கும் வித்தையை கத்துக்கணும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலையை செய்து முடித்து நல்ல பெயரை வாங்குவீங்க. அதாவது உங்களுடைய திறமைகள் இன்று வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. சோம்பேறித்தனத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வெற்றி காண்பீர்கள். கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் நன்மை நடக்கும். செலவை குறைப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

விருச்சிகம்


விருச்சக ராசிகாரர்கள் இன்று காலை எழுந்தது முதலே சுறுசுறுப்பாக இருக்கணும். வேலைக்கு கிளம்புவதாக இருந்தால் முன்கூட்டியே கிளம்பனும். முக்கியமான அப்பாயின்மென்ட் ஏதாவது இருந்தால் முன்னாடியே போயிருங்க. லேட்டா வீட்டில் இருந்து கிளம்பி நீங்கனா தேவையில்லாத அலைச்சலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லா விஷயத்திலும் இன்னைக்கு பக்காவான பிளான் இருக்கணும். பிளான் பண்ணாமல் செய்யும் விஷயங்கள் சொதப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயரும் புகழும் தேடி வரப் போகின்றது. நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்துக்கு சாப்பிடுங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பிரச்சனைகள் நிறைந்த நாளாகத்தான் இருக்கப் போகின்றது. ஆனால் நண்பர்களும் உறவுகளுக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், நல்ல பெயர் கிடைக்காது. இதனால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நன்மை நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி வைப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மற்றபடி நிதி நிலைமை சீராக இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க பிளான் பண்ணலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபடாது. அரைகுறை மனதோடு வேலை செய்வீர்கள். இதனால் இந்த நாளை கடந்து செல்வதில் சில சிரமங்கள் ஏற்படும். மனதை உற்சாகத்தோடு வைத்துக்கொள்ள இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள். கவனக்குறைவோடு நீங்கள் செய்யும் வேலை, நாளை பிரச்சினையை கொண்டு வந்து நிறுத்தி விடும். ஜாக்கிரதை, கொஞ்சம் சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இன்றைய வேலையில் அக்கறை காட்டுவது நன்மையை தரும்.
SHARE