யாழில். இந்திய பாரம்பரிய நடனம்..!!! (Video)
இந்தியாவின் 75 - ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்சியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய கலைஞர்களின் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் யாழில் நடைபெற்றன.
யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்த நடன நிகழ்வில் , ஓடிசி நடனம் , மணிப்புரி நடனம் , சத்திரிய நடனம் மற்றும் கதகளி என்பன நடைபெற்றன.