ஆய்வில் உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பின்விளைவுகள்..!!!
உலகளாவிய தடுப்பூசி தரவு வலையமைப்பு (Global Vaccine Data Network)எனப்படும் அமைப்பின் ஆய்வு மூலம் கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய 13 வெவ்வேறு மருத்துவ நிலைமைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஃபைசர் (Pzifer), மொடர்னா (moderna), அஸ்ட்ரா செனெகா ( AstraZeneca) போன்ற கொரோனா தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் தொடர்பில் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
99 மில்லியன் மக்களிடம் செய்த ஆய்வில், கொரோனா தடுப்பூசிக்குப் பின் நரம்பு மண்டல பாதிப்பு நோய், இதய தசை மற்றும் வெளியுறையில் அழற்சி, மூளை சிரை மண்டலத்தில் ரத்தம் உறைதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வுக் கட்டுரை “Vaccine” பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பிய மருத்துவக் கழகம் செய்த ஆய்வு முடிவுகளும் கொரோனா தடுப்பூசியின் அரிதான, ஆனால் உறுதியான பின்விளைவுகளை உறுதிபடுத்தியுள்ளது.
அதேவேளை தடுப்பூசி மூலம் ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளன என பயோ டெக்னாலஜி (biotechnology) நிறுவனமான சென்டிவைக்ஸ் (Centivaix) இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக்கப் க்லான்வைலே (Jacob Glanville) போன்ற வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.