Saturday, 3 February 2024

மின் வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு..!!!

SHARE


இரத்தினபுரி பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எஹெலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் வடப்பிட்டிய - பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரவித்துள்ளனர்.

காணி ஒன்றில் தூரியன் பழ செய்கைக்காக காணியின் உரிமையாளர் மின்சார வேலி அமைந்துள்ள நிலையில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரான 51 வயதுடைய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE