யாழில். குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!
விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.