நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம் ..!!!
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக பாடசாலைகள் நாளை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
உயர் தரப் பரீட்சைக்காக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன. பரீட்சைகள் ஜனவரி 31 முடிவடைந்து பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்படிருந்தது. எனினும் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாளை மீண்டும் நடாத்த நேர்ந்தமையால், பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த பாடசாலைகள் 5 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டன.
இதன் படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையமாக இயங்கிய முஸ்லிம் பாடசாலைகள் என்பன நாளை ஆரம்பமாகும்.