Monday, 5 February 2024

விருந்து வைபவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை..!!!

SHARE

மத்துகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்துகம ஓவிட்டிகல கொரட்டில்லாவ பகுதியைச் சேர்ந்த டொன் கலன மதுஷன் (வயது 32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருந்தில் கலந்துகொண்ட மத்துகம வெலிகட்டிய சண்டசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மத்துகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE