எதிர்வரும் திங்கள் முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை..!!!
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (4ஆம் திகதி) திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (29) தெரிவித்தார்.
கொழும்பில் இன்றைய தினம் (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்காக தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
0112117116 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தேவையான சேவைகளை தெரிவு செய்த பின்னர், தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள இலக்கத்தை உள்ளிட்டு சேவைக்கான திகதி, நேரம், இடம் என்பன குறுஞ்செய்தியாகப் பெறப்படும் எனவும் அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.