Monday, 5 February 2024

கில்மிஷா, அசானிக்கு யுவனின் இசையில் பாட வாய்ப்பு..!!!

SHARE

கில்மிஷா மற்றும்‌ அசானிக்கு விரைவில்‌ எனது இசையமைப்பில்‌ பாடல்‌ பாட வாய்ப்பு வழங்குவேன்‌ என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர்‌ யுவன்சங்கர்‌ ராஜா தெரிவித்தார்‌.

கொழும்பில்‌ நடைபெறவுள்ள யுவன்‌ லோங்‌ டிரைவ்‌ இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும்‌ இசையமைப்பாளருமான யுவன்சங்கர்‌ ராஜா கலந்துகொண்ட. ஊடக சந்திப்பு இன்று கொழும்பு தாமரைக்கோபுர அரங்கில்‌ நடைபெற்றது.

இலங்கையில்‌ இருந்து தென்னிந்திய தொலைக்காட்சி பாடல்‌ போட்டியில்‌ சாதித்த யாழ்ப்பாணத்தைச்‌ சேர்ந்த கில்மிஷாவுக்கும்‌ மலையகத்தைச்‌ சேர்ந்த அசானிக்கும்‌ எப்போது உங்கள்‌ இசையில்‌ பாட வாய்ப்பு வழங்குவீர்கள்‌ என ஊடகங்கள்‌ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே யுவன்சங்கர்‌ ராஜா இவ்வாறு தெரிவித்தார்‌.

மேலும்‌ தெரிவிக்கையில்‌, இருவரது பாடல்களும்‌ எனக்கு பிடிக்கும்‌ விரைவில்‌ கில்மிஷா மற்றும்‌ அசானிக்கு எனது இசையமைப்பில்‌ பாடல்‌ பாட வாய்ப்பு வழங்குவேன்‌ என்றார்‌.

சரிகமப லிட்டில்‌ சம்பியன்‌ பாடல்‌ இறுதிப்‌ போட்டியில்‌ வெற்றி பெற்ற கில்மிஷாவுக்கு சம்பியன்‌ பட்டம்‌ வழங்கியது யுவன்சங்கர்‌ ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE