கிளிநொச்சியில் புகையிரத கடவையை அவசரமாக கடக்க முற்பட்டவர் பலி ..!!!
கிளிநொச்சியில் புகையிரத பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரொருவர் புகையிரதம் மோதி பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(02) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை புகையிரதம் வருவதற்காக மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்தார்.
கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த44 வயதுடைய சிவராசமுத்தையா சசிவதனன் எனும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.