Tuesday, 27 February 2024

புத்தூரில் வீடு தீக்கிரை - பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்..!!!

SHARE

யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன.

புத்தூர் கலைமதி பகுதியில் உள்ள வீடொன்றே நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தீப்பற்றியுள்ளது.

அதனை அடுத்து வீட்டார் , வீட்டில் இருந்து வெளியேறிய அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காத நிலையில் , யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அவர்கள் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுக்குள் கொன்டு வந்தனர்.

மின் கசிவு காரணமாகவே வீடு தீப்பிடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE