Monday, 5 February 2024

யாழில். குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் கொழும்பில் போதைப்பொருளுடன் கைது..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவரும், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நபருமாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பி செல்லும் நோக்குடன் கொழும்பு , கல்கிசை பகுதியில் உள்ள சொகுசு மாடி குடியிருப்பில் தங்கி இருந்த வேளையே பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் உடைமையில் இருந்து 1கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது
SHARE