ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு..!!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 16 சதமாகவும், விற்பனை பெறுமதி 314 ரூபாய் 87 சதமாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் டொலரின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 56 சதமாகவும் விற்பனை பெறுமதி 315.ரூபாய் 29 சதமாகவும் பதிவாகியிருந்தது.
இதற்கமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 54 சதமாகவும் விற்பனை பெறுமதி 320 ரூபாய் 40 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.