வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!
வாகனம் ஒன்றை விற்பனை செய்தால், அது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் படிவத்தை பூர்த்தி செய்து மோட்டார் வாகன ஆணையாளருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு மோட்டார் வாகன ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வாகன உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட்ட நபர்கள் வாகனங்களை வாங்கும் போது, அதற்குரிய படிவத்தை முன்பிருந்த உரிமையாளர் அனுப்ப வேண்டும்.
அவ்வாறில்லாத பட்சத்தில் குற்றத்திற்காக வாகனம் பயன்படுத்தப்படுமானால் வாகனத்தை விற்ற உரிமையாளருக்கு சிரமம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் யுக்திய கைது நடவடிக்கையின் போது பல வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி முதல் கொழும்பில் இயங்கி வரும் சி.சி.டி.வி. கமரா அமைப்பின் பரிசோதனையின் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 560 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தவறு செய்யும் வாகன சாரதிகளுக்கு எதிராக 190 பொலிஸ் நிலையங்கள் ஊடாக அபராத சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.