யாழில் தேசியக் கொடிகளுடன் சுதந்திர தின பேரணி..!!!
இலங்கையின் 76வது சுதந்திர தினமான இன்று (04) யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாண மக்களும் வெளி மாவட்ட மக்களும் கலந்துகொண்டனர்.
யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி வைத்தியசாலை வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது.
நடை பவனி, மோட்டார் சைக்கிள் பவனி, முச்சக்கரவண்டி பவனி முதலியனவும் இந்த பேரணியில் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.