கில்மிஷாவின் வெற்றியை கொண்டாடிய சுண்டுக்குளி மகளிர் கல்லூரி..!!!
கில்மிஷாவின் வெற்றிக்கு, அவர் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கௌரவமளிக்கப்பட்டது.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் இன்று பாடசாலைகள் ஆரம்பமானது.
இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கில்மிஷா பங்கேற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.