அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை குறிப்பிட்டு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் தெரியபடுத்துமாறு கல்வி அமைச்சு ,அனைத்து மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
இந்த அறிவித்தலில் மாணவர்களுக்கான விசேட குறிப்பிடுவதாவது ,
1. கறுப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்
2. தொப்பி அணிந்து அல்லது குடையைப் பிடித்தவாறு வெயில் செல்லுங்கள்
3. வீட்டிலிருந்து செல்லும் போது சுத்தமான குடிநீரை எடுத்து செல்லவும்
4. அதிகளவில் தண்ணீர் அல்லது இளநீர் அருந்தவும்.
5. அதின வெப்பநிலை காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் பாடசாலை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்கவும்.
6. உடல் சூட்டை குறைக்க தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவும்.
7. தேவையற்ற சந்தர்ப்பங்களில் டையை இறுக்கமாக கட்டிக் கொள்வதனை தவிர்க்கவும்.