Tuesday, 6 February 2024

எரிபொருளுக்கு நாளை தட்டுப்பாடு?

SHARE

எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களால் பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (06) மட்டுப்படுத்தப்பட்டதால், நாளை இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல என எரிபொருள் விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
SHARE