Tuesday, 20 February 2024

500 ஆண்டுகளுக்கு பின் சூரியன் உருவாக்கியுள்ள உபயாச்சாரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை..!!!

SHARE

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் சமீபத்தில் தான் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசியில் சூரியன் நுழைந்த பின், இரண்டு புறமும் இரண்டு கிரகங்கள் அமைந்துள்ளன. அதுவும் ராகு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு இரண்டு புறமும் அமைந்து, உபயாச்சாரி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது.

முக்கியமாக இந்த உபயாச்சாரி ராஜயோகமானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு உபயாச்சாரி ராஜயோகமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் வேலை மற்றும் வியாபாரமானது மிகவும் சிறப்பாக இருக்கும். சிலர் திடீரென்று நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதோடு வெளிநாட்டில் இருந்து நல்ல பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்பை பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உபயாச்சாரி ராஜயோகமானது வருமானத்தில் பெரிய உயர்வை ஏற்படுத்தும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். புதிய தொழிலைத் தொடங்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வணிக ஒப்பந்தங்கள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உபயாச்சாரி ராஜயோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சிலர் முக்கியமான தொழில் முடிவுகளை எடுக்கலாம். வணிக ஒப்பந்தங்களும் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணப் பிரச்சனைகள் நீங்கி, நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும்.
SHARE