இன்றைய ராசிபலன் - 29.02.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மனதில் நினைத்த காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். இலட்சியத்தில் வெற்றி காண்பீர்கள். எப்படியாவது இந்த வேலை இன்று முடிந்தே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்களுடைய இந்த நாள் மறக்க முடியாத நல்ல நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்தது நல்லபடியாக நடக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து நடக்காத காரியங்களை இன்று செய்யலாம். புது தொழில் தொடங்குவது, புதிய வேலை தேடுவது, புது வீடு வாடகைக்கு தேடுவது, சொந்தமாக ஏதாவது சொத்து பத்து வாங்குவது, போன்ற விஷயங்களில் இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்க இருக்கும். பெரியவர்களின் ஆலோசனையின் மூலம் நிறைய நல்லது நடக்கக்கூடிய நாள் இது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவாக காணப்படும். இந்த வேலையை நம்மால் செய்ய முடியுமா. இது நமக்கு செட் ஆகுமா என்று ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவீர்கள். இதனாலையே இந்த நாள் கொஞ்சம் மந்தமாகத்தான் செல்லும். சுறுசுறுப்பாக உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. உங்களின் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்க. கடவுள் மீது பாரத்தை போட்டு, நல்ல காரியங்களை தொடங்குங்கள். நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் உஷாரா இருங்க. அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யக்கூடாது. அலுவலக பணியிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க. குடும்பத்தில்சண்டை சச்சரவு வர வாய்ப்புகள் உள்ளது. அதனால் வாக்குவாதம் வந்தால் கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எதிரிகளை எதிர்த்து போராடக்கூடிய தெம்பு வந்துவிடும். இத்தனை நாள் உங்களை ஏளனமாக பேசியவர்களுக்கு எல்லாம் முகத்தில் கறியை பூசும்படி பதிலடி கொடுப்பீர்கள். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள் இது? போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கையில் உயரக்கூடிய நன்மைகள் நடக்கும். இந்த நாளை என்ஜாய் பண்ணுங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. எந்த முடிவை எடுப்பது என்ற சலனும் மனதுக்குள் கொஞ்சம் இருக்கும். முக்கிய முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக பெரியவர்களின் ஆலோசனை, அனுபவசாலிகளின் ஆலோசனையை கேட்டு நடந்துக்கோங்க. அடம் பிடித்து எந்த விஷயத்தையும் சாதிக்காதிங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்ல நாளா இருக்க போகுது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நிறைய நல்லது நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகும். நீண்ட நாள் கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அன்றாட வேலையை ஒழுங்காக செய்தாலே போதும். அனாவசியமாக வேறு எந்த வேலையையும் செய்ய வேண்டாம். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பாதீங்க, குறிப்பாக எதிர்பாலின நட்பு கூடாது. கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு செல்லக்கூடாது. பிரச்சனை இருந்தால் நீங்களே தீர்த்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மனசு ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் சவாலான சூழ்நிலையே இருக்கும். நண்பர்கள் கூட எதிரிகளாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது பெரிய அளவில் பிரச்சினை நடக்காது. இன்றைக்காண சண்டை இன்னைக்கே முடிந்துவிடும். உங்கள் பக்கம் இருக்கக்கூடிய நியாயத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள். பிரச்சனை வந்து சரியாக கூடிய நாள் இது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. பம்பரம் போல சுற்றி சுற்றி எல்லா வேலையும் செய்யப் போறீங்க. நல்ல பெயர் வாங்குவீங்க. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மன நிம்மதி உண்டாகும். நிதி நிலைமை மேலோங்கும். பொன் பொருள் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பிரச்சனைகள் வரக்கூடிய நாளாகத்தான் இருக்கப் போகின்றது. அதற்காக உணர்ச்சி வசப்பட்டு கோபப்படக்கூடாது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. என்ன பிரச்சனையாக இருந்தாலும் பொறுமையாக நின்று சிந்தித்து நிதானமாக செயல்படுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். அனாவசியமாக அடுத்தவர்களை குறை சொல்லாதீங்க. இன்று வார்த்தையில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மட்டும் தான் தேவை. அடுத்தவர்களிடம் பேசவே பேசாதீங்க. முடிந்தால் மௌன விரதம் எடுங்க. வாக்குவாதத்தில் ஈடுபட்டால் உங்களுக்குத் தான் அவமானம் ஏற்படும் பாத்துக்கோங்க. பேசிப் பேசி உங்களுடைய மரியாதையை குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய நேரம், உங்களை பேச சொல்லும். நாக்கை அடக்கினால் மட்டுமே இன்று நன்மை நடக்கும் ஜாக்கிரதை.