Wednesday, 28 February 2024

இன்றைய ராசிபலன் - 28.02.2024..!!!

SHARE
மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சி தரும் நாளாக இருக்கப் போகின்றது. முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பண வரவு சீராக இருக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன் தொகையை இன்று வசூல் செய்து சாதனை புரிவீர்கள். மனசு சந்தோஷம் அடையும். சேமிப்பு இரட்டிப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்களுடன் பேசும்போது கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவலையோடு தான் இருக்கப் போறீங்க. மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிக கவனத்தோடு இருந்தால் மட்டுமே பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக தான் அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவு சரியாகும். நிதிநிலைமை கொஞ்சம் பின்னடைவாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகலாம். செலவை குறைக்கவும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்க போகின்றது. செய்த வேலையில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப விஷயத்தில் பொறுமை தேவை.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு உங்களுடைய நண்பர்கள் தான் காரணமாக இருக்கப் போகிறார்கள். அவர்களுக்கும் ஒரு நன்றியை தெரிவித்து விடுங்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் என்று உற்சாகமாக உங்களுடைய வேலையை செய்யப் போகிறீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் அடுத்தவர்களை பற்றி புறம் பேசக்கூடாது. உங்களுடைய வேலையை மட்டும் பார்க்கவும். கணவரோடு சண்டை போடாதீங்க. விட்டுக்கொடுத்து நடக்கவும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரும் நாள் இது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். இதனால் கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். கோபப்படுவீங்க, இதனால் தலைவலி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக வேலையை செய்யவும். அவசரப்படாதீங்க. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்களுடைய பிரச்சனையை மனைவி புரிந்து நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய அறிவாற்றலை பார்த்து அடுத்தவர்களும் ஆச்சரியப்படுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். நீண்ட நாள் பகை ஒரு முடிவுக்கு வந்துவிடும். இதனால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகிவிடும். எதிர்பாராத வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். பெரிய தலைபாரம் குறைந்தது போல இருக்கும். மனசு லேசாகும். இரவு நல்ல தூக்கம் வரும். தொழிலில் கூடுதல் கவனத்தோடு இருக்கணும். மொத்த பொறுப்பையும் மூன்றாவது நபரை நம்பி ஒப்படைக்க கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சேமிப்பு இரட்டிப்பாகும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு உங்களுடைய வேலைகளை கவனிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பெண் குழந்தைகளின் மூலம் மனசு சந்தோசம் பெறும். உற்றார் உறவினர்கள் எல்லோரையும் ஒன்றாக சந்திக்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தையும் நல்ல மேம்பாடு இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் பொறுப்பு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உங்கள் மீது யாராவது தேவையில்லாத பழியை சுமத்துவார்கள். அதிலிருந்து வெளிவர போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் மீது தவறு இல்லை என்றால் யாருக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். மனதில் பட்டதை பேசுவும். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குழப்பத்திலிருந்து வெளிவர குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
SHARE