மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன நிறைவான சந்தோஷத்தை பெறுவீர்கள். இதுநாள் வரை கஷ்டப்பட்டதுக்கு எல்லாம் பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் சீராக வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையை மட்டும் சரிவர செய்தால் போதும். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். புது மனிதர்களின் சந்திப்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நட்பு இன்று பிரச்சனைகளை கொடுத்து விடும். அரசுக்கு புறம்பான வேலையை செய்யாதீங்க. யாரோ ஒருவர் சொல்றாங்க அப்படிங்கிறதுக்காக உங்கள் பணத்தை எதிலும் முதலீடு செய்யக்கூடாது. மூன்றாவது நபரிடம் இன்று ஜாக்கிரதியாக இருக்கணும். பண விஷயத்தில் ஏமாற வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் விருதுநர்களின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர்ந்ததில் உற்சாகத்தோடு இன்றைய நாளை கடந்து செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து வெற்றி காணக்கூடிய அளவு உங்களுக்கு தெம்பும் தெளிவும் இன்று இருக்கும். எந்த குழப்பமும் வேண்டாம். உங்கள் மனதுக்கு பட்டதை மட்டும் செய்யுங்கள் போதும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இன்று ஏதாவது ஒரு விஷயத்தை புதுசாக கற்றுக் கொள்வீர்கள். அது உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய இந்த நாளில் குல தெய்வத்திற்கு நன்றி தெரிவிங்கள். முடிந்தால் மாலை குடும்பத்தோடு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்வது உங்கள் சந்தோஷத்தை மேலும் இரட்டிப்பாக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வாய் தகறாரு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் கவனத்தோடு இருக்க வேண்டும். அடுத்தவர்களுடன் பேசும்போது ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். வார்த்தையை அனாவசியமாக விடாதீங்க. சண்டை சச்சரவையில் இருந்து தப்பிக்க இன்று மௌன விரதம் இருப்பதே சிறந்தது. தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்று தப்பிக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பொறுமையாக யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். புது முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். உங்களுடைய பிள்ளைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். உறவுகளிடம் பேசும்போது கவனம் தேவை. வாக்குவாதம் சண்டை வர வாய்ப்பு உள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனசு அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எந்த சிந்தனையும் சரியாக இருக்காது. ஏதோ கெட்டது நடப்பது போல அறிகுறிகள் தோன்றும். ஆனால் அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. உங்களுக்கு நல்லது தான் நடக்கும் என்று நம்புங்கள். பாசிட்டிவ் திங்கிங் மட்டும்தான் இன்று உங்களுக்கு வெற்றியைத் தரும். நெகட்டிவ் திங்கிங் உள்ளவர்கள் மனசுக்குள் உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்கள் இன்று கூடுதல் உழைப்பை போட வேண்டும். எந்த ஒரு வேலையையும் சுலபமாக செய்துவிட முடியாது. சோம்பேறித்தனத்தோடு இருந்தால் இன்று தோல்வி மட்டுமே கிடைக்கும். ஒருமுறை முயற்சி செய்து தோல்வி கிடைத்ததா, இரண்டாவது முறை முயற்சி செய்து தோல்வி கிடைத்ததா, மூன்றாவது முறையும் முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். அதைவிடுத்து என்னால் முடியாது என்ற வார்த்தையை இன்று சொல்லவே கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தேவைக்கு மட்டும் பேசுவீர்கள். அனாவசியமாக பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது. உங்களுடைய வேலையில் அதிக அக்கறை காட்டுவீர்கள். யாரு எப்படி போனாலும் கவலை கிடையாது. என்னுடைய வேலை முடிந்தால் போதும் என்று பக்காவாக பிளான் பண்ணி வேலைகளை நகர்த்திச் செல்வீர்கள். இதனால் சின்ன சின்ன எதிரிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. நேர்மையாக ஸ்டிட் ஆஃபிஸராக இருந்தால் எதிரிகள் வரத்தான் செய்வாங்க. அதெல்லாம் கண்டுக்கவே கண்டுக்காதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன அழுத்தத்தோடு காணப்படுவீர்கள். உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். அதிலிருந்து விடுபட வேண்டும் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொண்டால் மட்டும்தான் வேலைகள் சரியாக நடக்கும். அதற்கான வழியை முதலில் தேடுங்கள். உங்களுக்கு எது ரொம்ப பிடிக்குமோ, எந்த விஷயம் உங்களுக்கு சந்தோஷம் தருமோ, அதை இன்று செய்து விடுங்கள். அப்பதாங்க இன்னைக்கு உங்களால நிம்மதியா வாழ முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலையை சரியாக செய்ய முடியாத சூழ்நிலை உண்டாகும். சொன்ன நேரத்துக்கு வேலையை முடிச்சு கொடுக்க மாட்டீங்க. அதனால திட்டு வாங்கலாம். ஆகவே காலையிலிருந்து அக்கறையோடு செயல்படவும். வியாபாரத்தில் கொஞ்சம் முன்பின் இருக்கத்தான் செய்யும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் பிரஷர் இருக்கும். டார்கெட்டை முடித்தே ஆக வேண்டும் என்ற பிரச்சனை சில பேருக்கு இருக்கும். கவலைப்படாதீங்க, எல்லாருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை தான் இது. அதற்காக மனம் உடைந்து போய் உட்கார கூடாது. ‘இதுவும் கடந்து போகும்’ என்ற வாசகத்தை மனதில் வைத்து வாழ்க்கையை கடந்து செல்லவும். இறை நம்பிக்கையை கைவிடாதிங்க.