இன்றைய ராசிபலன் - 25.02.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். பணத்தட்டுப்பாடு வர வாய்ப்புகள் உள்ளது. இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். வீணாக கணவன் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். பொறுமையாக இருந்தால் பிரச்சனைகளை சமாளிக்கலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதானமா சில முடிவுகளை எடுத்தால் நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கப்போகின்றது. எடுத்த காரியம் உடனடியாக வெற்றியை கொடுக்காது. இதனால் மணக்குழப்பம் ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். இதனால் புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுவது நல்லது. மற்றபடி நிதி நிலைமை சீராக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையையும் உங்கள் தலைமையில் போட்டுக் கொண்டு செய்வதற்கு தயாராக இருப்பீர்கள். உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கவும் நிறைய பேர் தயாராக இருப்பார்கள் . வேலையில் முன்னேற்றம் தொழிலில் முன்னேற்றம் என்று எல்லாம் இன்று சிறப்பாக இருக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சொந்த பந்தங்களோடு நெருக்கமான உறவு வைத்துக் கொள்வது நன்மையை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனசு ரொம்பவும் நிம்மதியாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் முயற்சி செய்த காரியங்கள் இன்று வெற்றியை அடைந்து விடும். எதையோ சாதித்தது போல உணர்வீர்கள். மனசு சந்தோஷம் அடையும், நிறைவாக இருக்கும். கொஞ்சம் வேலை சுமை பார்க்காமல், நேரமில்லை என்றெல்லாம் சொல்லாமல், கோவிலுக்கு சென்று இறைவனுக்கும் நன்றியை தெரிவித்து விட்டு வாருங்கள். சந்தோஷம் பல மடங்கு பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் ரொம்ப ரொம்ப கஷ்டம் இருக்க போகிறது. நாலு பேர் செய்ய வேண்டிய வேலையை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். இதனால் உடல் அசதி ஏற்படும். இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும், உங்களுக்கு மட்டும் வரிசை கட்டி வேலைகள் காத்துக் கொண்டிருக்கும். இதுவே பாதி தலைவலியை உண்டு பண்ணிவிடும். ஆனால் என்ன செய்வது சில விஷயங்களை எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று சொல்லவே முடியாது அல்லவா.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எந்த ஒரு வேலையிலும் மனசு முழுசாக ஈடுபடாது. இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். டீம் லீடர் கிட்ட திட்டு வாங்குவீங்க. மேனேஜர் கிட்ட திட்டு வாங்குவீங்க. சொன்ன வேலையை சரியாக செய்யாமல் வேலை செய்யாததற்கு காரணத்தை சொல்லி கெட்ட பெயர் வரும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. விடுமுறை நாளை என்ஜாய் பண்ணுவதை விட வேலையில் நல்ல பேர் எடுப்பது தான் இன்னைக்கு முக்கியம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நிம்மதியான ஓய்வு எடுக்கக் கூடிய நாளாக அமையப்போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். எல்லா வகையிலும் இன்று உங்களுக்கு நன்மை நடக்கக்கூடிய நாளாக தான் அமையப் போகின்றது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு உள்ளவே மறைத்து வைத்திருந்த எல்லா நல்லதையும் எடுத்து வெளியே விட போறீங்க. இதை பார்த்து அசந்தவர்கள் எல்லாம் உங்களை பாராட்டி தள்ளப் போகிறார்கள். இதனால் கண்திருஷ்டி படமும் வாய்ப்புகள் உள்ளது. ரொம்ப புகழ்ச்சி நிலைக்குப் போகும் போது தலைகனம் வரக்கூடாது பாத்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் இருக்கக் கூடாது. முன்பின் தெரியாத வேலை, முன்பின் தெரியாத நபர்கள் சொல்வதைக் கேட்டு, எந்த வேலைக்கும் போகாதீங்க. அனுபவசாலிகளின் பேச்சை கேளுங்கள். குறிப்பாக உங்களுடைய நலன் விரும்பி இருப்பாங்க இல்லையா. அவங்க கிட்ட சில விஷயங்களை சொல்லாமல் எந்த ஒரு முடிவையும் நீங்களே எடுக்காதீங்க. யாரிடமாவது ஏமாற வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று தேவைக்கு ஏற்ப மட்டும்தான் பேசுவீர்கள். உங்களுக்கு தேவையில்லை எனும் போது அந்த இடத்திலிருந்து நைசாக நழுவி செல்ல தான் பார்ப்பீர்கள். அதாவது காரியவாதியாக செயல்பட போகிறீர்கள். அது அனைவருக்கும் அம்பலமாக தெரியும்படி நடக்கப் போகின்றது. இதனால் உங்களைப் பார்த்து எல்லாம் சுயநலம் கொண்டவன் என்று கூட சொல்லலாம். அதைப்பற்றி கவலைப்படாதீங்க. உங்களுக்கு நஷ்டம் என்று தெரிந்தால் அந்த பக்கம் நீங்க போகாதீங்க அதுதான் புத்திசாலித்தனம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுயநலமாக சிந்திப்பீர்கள். எல்லாம் நல்லதும் எனக்கே நடக்க வேண்டும். பிரமோஷன் எனக்கே கிடைக்க வேண்டும். சம்பள உயர்வு அதுவும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று யோசிப்பீங்க. அடுத்தவர்களுடைய நலனை பற்றி இன்று உங்களுக்கு கவலை இருக்காது. இருந்தாலும் ரொம்ப ரொம்ப சுயநலமா சிந்திப்பது கொஞ்சம் தவறு அதை மாற்றிக் கொண்டு பொதுநலமாக சிந்தித்தாலும் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் இருந்து சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். விடுமுறை நாள் தான். இருந்தாலும் சில பேர் உங்கள் மனசை குழப்பி விடுவதற்காகவே மொபைல் போனில் கூப்பிடுவாங்க. குழப்பவாதி என்று தெரிந்தால் போனை அட்டென்ட் பண்ணாதீங்க. மூன்றாவது நபர் சொல்வதை முழுமூச்சோடு கேட்காதீங்க. வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடந்தால் நல்லது நடக்கும். பல நாள் இழுபறியாக இருந்து வந்த சொத்து பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.