இன்றைய ராசிபலன் - 22.02.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று முன்கோபப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களைப் பற்றி அவதூறாக பின்னால் பேசுபவர்களை மன்னித்து விட்டு விடுங்கள். அவர்களோடு போட்டி போட்டு சண்டை போடாதீர்கள். தொழிலில் எதிரிகளை வீழ்த்த நேருக்கு நேர் மோதக்கூடாது. புத்திசாலித்தனமாக யோசித்து சூட்சும வித்தைகளை கையாள வேண்டும். இன்று வேகத்தை விட விவேகத்தோடு செயல்படனும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் பொறாமை படக்கூடிய சக ஊழியர்களில் சில பேர் எதிரிகளாகவும் மாறலாம். நண்பர்களாக இருந்தாலும் அவர்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளையின் போக்கை கவனியுங்கள். மனைவியின் அன்பை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன உளைச்சலான நாளாக இருக்க போகின்றது. எவ்வளவு வேலை செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. ஆகவே ரொம்பவும் கஷ்டப்பட்டு எந்த வேலையையும் செய்யாதீங்க. உங்களால் முடிந்த வேலையை செய்து கொண்டு இன்றைய நாளை பிரச்சனை இல்லாமல் நகர்த்தி செல்லவும். எல்லா வேலையும் செய்து விட்டு நல்ல பெயர் கிடைக்கவில்லையே என்று அடுத்தவர்களிடம் சண்டை போடுவதிலும் இன்று பிரயோஜனமும் இருக்காது. நம்மை நாமே சந்தோஷமாக வைத்துக் கொள்ள சில விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் ஆகணும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய அளவில் சிந்தனை இருக்கும். நீங்கள் நினைத்ததில் சில காரியங்கள் நடக்காமல் போனதால், கவலையில் மூழ்கி இருப்பீர்கள். கவலைப்படாதீங்க முயற்சிகளை கைவிடாதீர்கள். முயற்சி செய்து கொண்டே இருந்தால் நீங்கள் நினைத்ததை அடைய முடியும். மேலதிகாரிகளிடம் பணிவோடு பேசுங்கள். எதிர்த்து குதர்க்கமாக பேசுவதை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும். தொழிலில் முதலீட்டில் கவனம் செலுத்தவும். அனாவசியமாக மூன்றாவது நபரை முழுசாக நம்பி பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை வைத்துக் கொள்ள வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் வேலையில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கவும் வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பொறுப்பை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க. ரொம்பவும் நண்பர்கள் போல தான் இருப்பார்கள். ஆனால் பின்னால் உங்களுக்கு குழி தோண்டி வைப்பார்கள் ஜாக்கிரதை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. சாதனையாளர்களாக உங்களை மாற்றிக் கொள்ள ஏதாவது முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றால் இன்று அந்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். மாணவர்கள் மேல் படிப்புக்காக முயற்சிகள் செய்வதாக இருந்தாலும் இன்று செய்யலாம். நல்ல முன்னேற்றம் நிறைந்த நாள் இது. புதியதாக தொழில் தொடங்குவது புதிய வேலைக்கு அப்ளிகேஷன் போடுவது இப்படி நல்ல விஷயங்களை இன்று செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாக ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு முயற்சி செய்து வைத்திருந்த காரியங்களில் எல்லாம் இன்று வெற்றி கிடைக்கும். நீங்களே எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க. ஆனா உங்களுக்கான ஒரு அதிர்ஷ்டம் என்று காத்துக் கொண்டிருக்கிறது. அது எந்த ரூபத்தில் வேண்டும் என்றாலும் உங்களை வந்து அடையும். ஆக மொத்தத்தில் இன்று நீங்கள் மனசு சந்தோஷத்தில் மிதக்க போகிறீர்கள்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவுதான் புகழ்ச்சி கிடைத்தாலும் எவ்வளவுதான் முன்னேற்றம் கிடைத்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உங்களுடைய வேலையை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பெற்றவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணத்தின் போது ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் வரும். ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். ஆனால் நல்ல பெயர் மட்டும் கிடைக்காது. இதனாலேயே உங்களுடைய மனசு வெறுத்துப் போகும். எதற்கு தான் இவ்வளவு உழைக்க வேண்டுமோ என்று தோணும். ஆனால் கவலை படாதீங்க. உங்களுக்கான அங்கீகாரம் கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும். முயற்சிகளை கைவிடாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவும் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடிய விரைவில் புதிய தொழிலை தொடங்குவதற்கு தேவையான பேச்சு வார்த்தைகளையும் மேற்கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய முன்கோபத்தால் சில வாய்ப்புகளை இழக்க நேரிடும். சில சொந்த பந்தங்களையும் இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாயை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. எல்லோருக்கும் சுயமரியாதை உண்டு என்பதை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். உங்களுடைய வாயின் மூலம்தான் உங்களுக்கு பிரச்சனையை வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. கொஞ்சம் ஓய்வு தேவை என்று மனசு சொல்லும். ஆனால் சில வேலைகளை தவிர்க்க முடியாது. அதனால் கொஞ்சம் சிரமப்பட்டு சில பேர் வேலைக்கு செல்வீர்கள். ரொம்பவும் உடல் அசதி இருந்தால் விடுமுறை எடுத்து ஓய்வு எடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரின் பேச்சை முழுமையாக நம்பாதீர்கள்.