Wednesday, 7 February 2024

மாசி மாத ராசி பலன் 2024 : வருமானத்தை குவிக்க உள்ள 6 ராசிகள்..!!!

SHARE

சூரிய பகவான் கும்ப ராசியின் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதம் ஆகும். இந்த மாதத்தில் சில ராசியினருக்கு அரசாங்க வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல அதிகாரம் கிடைக்கும். உங்கள் வேலையில் நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுக்க வாய்ப்புள்ளது.



மேஷம் மாசி மாத ராசி பலன்

கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஆனால் இந்த மாதத்தில் உங்களுக்கு பல வழிகளில் அதிர்ஷ்ட பலானை பெறலாம். வேலையில் சாதகமும், நல்ல சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்.

தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு அதில் சாத தன்மையும், சலுகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் அடைவீர்கள். காதல் கை கூடும். உங்கள் லட்சியத்தில் தெளிவாக செயல்படுவீர்கள்.




ரிஷபம் மாசி மாத ராசி பலன்

ராசிக்கு 10ம் இடத்தில் சூரியன், சனி சேர்க்கை நடக்கிறது. ஒரு வேலையை செய்ய தூண்டும் சூரியனும், வேலையை செய்து முடிக்கும் சனியும் சேர்க்கை உங்களுக்கு பல விதத்தில் நல்ல பலனை தரும். நீங்கள் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் உங்களுக்கான அங்கிகாரம், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை மாற நினைப்பவர்களுக்கு சாதக காலம்.
நீங்கள் உள்ள துறைகளில் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். வீட்டை பழுது பார்த்தல் தொடர்பான விஷயங்களில் சாதக பலன்கள் அடைவீர்கள். . தேவையற்ற செலவுகளைக் குறைக்க உங்கள் முதலாளிக்கு உதவுவீர்கள். அதனால் பாராட்டும், பலனும் பெறலாம்.

துலாம் மாசி மாத ராசி பலன்

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதத்தில் செல்வத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதிக நம்பிக்கையுடன் எந்த வேலையையும் செய்து முடிக்க முடியும். ஒருவர் மீது காதல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நண்பருடன் நேரத்தை செலவிடவும், குழுவாக பயணம், சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
நண்பர்களின் ஆதரவையும், நண்பர்களின் வட்டத்தில் புகழும் அதிகரிக்கும். குடும்பத்தில் இணக்கமான சூழல் இருக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு நிலம், வீடு, மனை வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். அதற்கான முயற்சிகள் வெற்றி அடையும்.

விருச்சிகம் மாசி மாத ராசி பலன்

கும்ப ராசியில் சூரியன் - சனி சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வீட்டிலிருந்து தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டைச் சுற்றி உள்ளவர்கள் மூலம் உதவியும், ஆதரவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு நற்பெயர் உங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும்.
வேலை தொடர்பாக இடமாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். வெளியூர், வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெறலாம். சக ஊழியர்களிடையே நல்வாழ்வு உணர்வை வளர்ப்பீர்கள். புதிய வீடு அல்லது நிலம் வாங்க இந்த நேரம் உகந்ததாக இருக்கும்.


தனுசு மாசி மாத ராசி பலன்

கும்ப ராசியில் சூரியனின் இந்தப் பெயர்ச்சி உங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப் போகிறது. நீங்கள் விருப்பப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை, சாதனங்களை வாங்க, பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் திறன் மேம்படும். புகழ் உயரும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பணியிடத்தில் வேலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
வெளியூர், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்து வருவீர்கள். விரும்பும் புகழையும் கௌரவத்தையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த புதிய வாகனம் வாங்கலாம்.




கும்பம் மாசி மாத ராசி பலன்

கும்ப ராசியிலேயே சூரியன் - சனியின் சேர்க்கை நடக்கிறது. இதனால் திருமண வாய்ப்பு தேடி வரும். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஸ்திர தன்மையாக உணர்வீர்கள்.
உங்களின் தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு தொடர்புகளால் அதிக லாபத்தை அடையலாம். செல்வாக்கு மிக்க நபரின் மூலம் ஒத்துழைப்பை அடைவீர்கள். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்க வேலை அல்லது ஒப்பந்தங்களைப் பெறலாம்.
SHARE