புதன் பெயர்ச்சியால் உருவாகும் 2 ராஜயோகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்..!!!
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், படிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது மகர ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதி புதன் சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பயணித்து வருவதால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. அத்துடன் இந்த ராசியில் சூரிய பகவானும் பயணித்து வருவதால், புதன் பெயர்ச்சிக்கு பின் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த இரண்டு ராஜயோகங்களால் பிரகாசிக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சச மற்றும் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். பழைய முதலீடுகளால் நல்ல ஆதாயமடைவீர்கள். இக்கால கட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சச மற்றும் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல மரியாதையைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்கினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சச மற்றும் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் திருமணமான இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் வேலையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சனி பகவானின் அருளால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.