மின்சாரக் கட்டணத்தை 14 சத வீதத்தால் குறைக்க முன்மொழிவு..!!!
இலங்கை மின்சார சபை கடந்த 22ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்த பிரேரணையில் மின்சாரக் கட்டணத்தை 14 சத வீதத்தால் குறைக்க முன்மொழிந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணத்தை 3.34 சதவீதம் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனையை மீளப் பெற்று இந்த புதிய திட்டத்தை மின்சார சபை முன்வைத்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட அதே அளவான கட்டணத்தை குறைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.