Thursday, 1 February 2024

யாழில். டெங்கு பரவும் சூழல் - 13 பேருக்கு எதிராக வழக்கு..!!!

SHARE

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 13 பேரிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட ஆனைக்கோட்டை,மானிப்பாய் மற்றும் சுதுமலை பகுதிகளில் சுதுமலை பொது சுகாதார பிரிவுகளில் வேலுப்பிள்ளை ரதீசனின் மேற்பார்வையில் நடைபெற்ற டெங்குகட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பொருட்டு களத்தரிசிப்பில் ஈடுபட்ட பொதுசுசுகாதார பரிசோதகர்களான ரா.யொனி பிரகலாதன், சு.ஜெகதாசன், கி.அஜந்தன், கு. பாலேந்திரகுமார் ச.பிறின்சன் மற்றும் ம.ஜெயபிரதீப் ஆகியோரினால் இனங்காணப்பட்ட 13 வீட்டு உரிமையாளர்களிற்கு எதிராக இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப் பணம் அறவிடப்பட்டதுடன் , இனிவரும் காலங்களில் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மல்லாகம் நீதவான் எச்சரித்து விடுவித்தார்.
SHARE