மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஆகவே வெற்றியில் எந்த அளவுக்கு சந்தோஷம் வருகிறதோ, அந்த அளவுக்கு தோல்வி காணும் போதும் விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். முன்பின் தெரியாத நபரை இன்று நம்ப வேண்டாம். தெரியாதவர்களுக்கு கடனாக காசு கொடுக்காதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புது வேலையை தேடி கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. பிடித்த வேலை, மனதிற்கு பிடிக்காத வேலை என்று எல்லாம் கிடையாது. கிடைத்த வேலைக்கு இன்று சரி சொல்லுங்கள். நிதி நிலைமை சீராகும். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை வைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இன்றைக்கு வர வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கப் போகின்றது. உங்களை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று நாலு பேர் துரத்தி துரத்தி தோற்கடிக்க பார்ப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சவாலாக எடுத்துக்கொண்டு, உங்களுடைய திறமையை வெளிப்படுத்துங்கள். சவால்களில் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிராளிகளை குறைத்து எடை போட வேண்டாம். வியாபாரத்தில் நிறைய போட்டிகள் இருக்கும். சமாளிக்க தெம்பு தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப பொறுமையான நாளாக இருக்கப் போகின்றது. எந்த அவசரமும் இருக்காது. உங்களுடைய வேலையை நிதானமாக செய்யலாம். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க. பிரஷர் போட மாட்டாங்க. வேலை செய்யும் இடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மூன்றாவது நபரிடம் பகிர வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் கொஞ்சம் இருக்கும். ஆகவே புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடவும். அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டும் போதும். வியாபாரத்தில் அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் உங்களுடைய வியாபாரத்தை முன்னேற்ற ரொம்பவும் பாடுபட வேண்டியதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பம்பரம் போல உங்களுடைய வேலையை செய்ய தொடங்கி விடுவீர்கள். குறிப்பாக கலைஞர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாள். வெளிநாட்டில் வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வர காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியம் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. விற்காத நிலம் வண்டி வாகனம் ஏதாவது இருந்தால் அதை விற்க இன்று முயற்சி எடுங்கள். நிச்சயம் சக்சஸ் தான். கடன் பிரச்சனை தீரும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். கோபமடைந்தாலும் அதை உடனடியாக வெளி காட்டக் கூடாது. சந்தோஷமாக இருந்தாலும் அதை உடனடியாக வெளியே காட்டக் கூடாது. இயல்பாக நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதுவாக இருந்தாலும் பெரியவர்களது ஆலோசனையை ஒரு முறை கேட்டு நடக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். உங்கள் மனதில் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தப் போகிறீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதி நிலவும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ரிலாக்ஸாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் நெகட்டிவ் ஆக சிந்திக்கக் கூடாது. நல்லது நடக்கும், நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும். அச்சச்சோ கெட்டது நடந்து விடுமோ என்று நினைத்தால் கூட உங்களுக்கு பிரச்சனை தான் பார்த்துக்கோங்க. வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கவனமாக பழகவும் ஒரு சந்தேக கண் எல்லோர் மீதும் வையுங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று குழப்ப நிலையில் இருந்து விடுபடுவீர்கள். சில சிக்கலான பிரச்சனைகளுக்கு எல்லாம் இன்று தீர்வு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். உங்களைப் பற்றி தவறாக எண்ணியவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் சரியாக மாறிவிடும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சக்சஸ் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் டார்கெட் அச்சீவ் செய்ய நிறைய வாய்ப்புகள் வரும். எல்லாவற்றையும் நழுவ விடாமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சில பேருடைய பொறாமை குணம் உங்களை வீழ்த்த காத்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் தான் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய தற்பெருமைகள் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.