Monday 8 January 2024

மண்பானை தண்ணீர் ஈட்டும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

SHARE

ஒரு காலத்தில், குளிர்சாதனப்பெட்டிகள் பரவலாகப் பயன்படுத்தப்படாதபோது, தண்ணீரை இயற்கையாக குளிர்விக்க உதவும் மண் பானைகளானது பயன்படுத்தப்பட்டன. இந்த பழமையான நடைமுறையானது கண்ணாடி அல்லது பிற கொள்கலன்களுக்கு ஒரு பாரம்பரிய மாற்று மட்டுமல்ல, ஆரோக்கியமான மற்றும் சிகிச்சைத் தேர்வாகும்.

மண்பானையில் தண்ணீர் சேமித்து குடிப்பதன் நன்மைகள்:

1. Fridge போன்றவற்றில் தண்ணீரை சேமிக்கும்போது அதிலுள்ள ரசாயனங்கள் மூலம் தண்ணீரானது குளிர்ச்சியடையும் ஆனால் இந்த மண்பானையானது இயற்கையாகவே தண்ணீரை குளிர்ச்சியூட்டும் வகையில் ஆரோக்கியமளிக்கும்.

2. இரைப்பை தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இதிலுள்ள காரத்தன்மையானது அந்த பானையில் சேமிக்கப்படும் தண்ணீரின் pH அளவை சமநிலை படுத்துகிறது.

3. தினமும் மண்பானை தண்ணீரை குடிப்பதன்மூலம் இதிலுள்ள தாதுக்களானது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

4. மலச்சிக்கல், கண் எரிச்சல், வாய்ப்புண் உள்ளிட்ட Heat சார்ந்த நோய்களில் இருந்து உங்களை தடுக்க இந்த மண்பானையில் உள்ள இயற்கை தாதுக்களானது தடுக்கும்.

5. உடம்பில் ஏற்படும் காயங்கள் மற்றும் அதன் பின்விளைவுகளை தடுக்க இந்த மண்பானையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை தாதுக்களானது உதவக்கூடும்.

6. Fridge இல் இருந்து எடுத்து குடிக்கக்கூடிய தண்ணீரானது பெரும்பாலானோருக்கு தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும் ஆனால் இந்த மண்பானையில் குடிப்பதனால் அதுபோன்ற பிரச்சனை ஏற்படாது.

7. அசுத்தங்களை நீக்குவது மட்டுமின்றி நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்துபோராடும் வகையில் இயற்கை முறையில் சுத்திகரிக்கப்படுவதால் இதில் சேமித்த தண்ணீரை குடிப்பது நல்லது.

8. மண்பானையில் இயற்கை சத்துக்கள் உள்ளதால் இது செரிமான செயல்பாட்டிற்கு உதவும்.
SHARE