Monday 1 January 2024

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு..!!!

SHARE


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி , 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,707 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SHARE