Thursday 18 January 2024

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்..!!!

SHARE

அரச ஊழியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும். இதேவேளை ஏப்ரல் மாதம் முதல் 10000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடவுள்ளது.

பணம் அச்சடிப்பதும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே உரிய தொகையை சேமிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
SHARE