Monday 1 January 2024

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தன..!!!

SHARE


எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, புதுவருடப் பிறப்பு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 366 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 464 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 358 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 475 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

இதேவேளை, எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.

சிபேட்கோ நிறுவனத்தின் விலை அதிகரிப்புக்கு அமைய, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சினோபெக் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளுக்கு சலுகை வழங்கியுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றருக்கு 3 ரூபா சலுகை வழங்கியுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 363 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டருக்கான விலையை 26 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SHARE