Monday 22 January 2024

மகரம் செல்லும் புதன்: பிப்ரவரியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கப் போகுது..!!!

SHARE

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜோதிடத்தின் படி, புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது புதன் குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் தனது நண்பனான சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த புதன் பெயர்ச்சியானது பிப்ரவரி 01 ஆம் தேதி நிகழவுள்ளது.

இதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும், வெற்றியையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். காதலித்து வந்தால், உங்கள் காதல் வெற்றியடையும். ஆராய்ச்சி தொடர்பான வேலைகளை செய்பவராக இருந்தால், இக்காலத்தில் நல்ல முடிவுகளுடன், பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் மற்றும் வியாபாரத்தை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறக்கூடும்.

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், இந்த புதன் பெயர்ச்சிக்கு பின் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள்.
SHARE