க.பொ.த உயர்தர விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு..!!!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்துக்கு விண்ணப்பிக்கும் போது சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்துக்கு விண்ணப்பிக்கும் போது சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும்.
அத்துடன், மாணவர்களுக்கு தான் கல்வி பயிலும் பாடசாலையில் பொருத்தமான பாடம் இல்லை என்றால், அந்த மாணவர்களுக்கு மற்ற பாடசாலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.