Monday 25 December 2023

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!

SHARE


யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது சுழலை நுளம்புகள் பரவாத வகையில் பாதுகாக்க வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

டிசம்பர் மாதத்தில் இதுவரை 945 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன் இன்றைய தினம் 40 டெங்கு நோயாளிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் விடுதி டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல்நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

யாழ்ப்பாணம், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது சால சிறந்தது என்றார்.

இன்றையதினம் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE