இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.இணைப்பாளருக்கு எதிராக பெண் உத்தியோகத்தர் முறைப்பாடு..!!!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரே நேற்று இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைபாளர், முறைப்பாட்டாளர் மற்றும் ஒரு பெண் உத்தியோகத்தர் விசாரணைக்காக இன்று பிற்பகல் அழைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் கூறினர்.