யாழ்.பல்கலை மாணவன் போதைப்பொருளுடன் கைது..!!!
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட போது , போதை மாத்திரைகள் , தடை செய்யப்பட்ட லேகிய பொதிகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து மாணவனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துன்னார்.