நாடு முழுவதும் படிப்படியாக வழமைக்கு திரும்பும் மின்சாரம்..!!!
நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின் விநியோகம் படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம் சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோக முதன்மை பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (டிசெ.9) மாலை 5.10 மணி முதல் நாடுமுழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.