Saturday 23 December 2023

தேர்தல்களில் பெண்களை அதிகம் உள்வாங்கினால் குற்றச் செயல்களும் செலவீனங்களும் குறையும் - வாசுகி சுதாகரன்..!!!

SHARE


நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் கட்சிகள் பெண்களை அதிகம் உள்வாங்குமானால் நாட்டில் குற்றச் செயல்களும் , தேர்தல் கால தேவையற்ற செலவீனங்களும் குறையும் எனத் தெரிவித்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணித் தலைவி திருமதி வாசுகி சுதாகரன்.

தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் இடம்பெறுவதிலும் அரசியல்வாதிகளின் நலனோம்புகளை பேணுவதிலும் தேர்தல் செலவு மற்றும் என்ற அம்சம் தொடர்பான. கலந்துரையாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

WESTMINISTER FOUNDATION FOR DEMOCRACY அமைப்பு இது தொடர்பான ஆய்வுகளை நடாத்தி வரும் நிலையில் இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தேர்தல் செலவீனங்கள் தொடர்பான கருத்துக்களை முன் வைத்தனர்.


இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணித் தலைவி திருமதி வாசுகி சுதாகரன் தெரிவிக்கையில்,

""தேர்தல்களில் அதிகம் பெண்கள் உள்வாங்கப்படும் போது தேவையற்ற குற்றச் செயல்கள் குறையும் அத்துடன் தேவையற்ற செலவுகளைக் குறைக்க முடியும்.உள்வாங்கப்படும் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை. ஊடகங்களை கையாள்வதற்கு சமன் செய்யப்பட்ட பொது ஊடகத்துறை இருக்க வேண்டும். தனியார் ஊடகத்துறையை பயன் படுத்துவதில் செலவுகள் அதிகம் உண்டு.அதே போன்று விளம்பர உருவாக்கம் தட்டச்சு கணணி வேலைகளுக்கான செலவு வழமையை விட தேர்தல் காலத்தில் அதிகரித்து காணப்படுகின்றது. இவற்றை சட்டம் ஊடாக தடுக்க வேண்டும். அரச உத்தியோகத்தர் தேர்தலுக்கு போட்டியிடும் போது அவரிடம் இருக்கும் பணத்தையும் பறித்து விட்டு தான் போட்டியிட வைக்கின்றனர். அதனால் களவு செய்யும் வழியை அரசாங்கம் தேர்தல் ஊடக செய்கின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதாக கூறி கடந்த 5 மாதம் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது இன்றுவரை தேர்தலுக்காக செய்யப்பட்ட இடமாற்றமோ அல்லது அதற்காக பறிக்கப்பட்ட பணங்களோ மீளத் தரவில்லை.

இது தேர்தல் விடயத்தில் நிதி தொடர்பில் மிக அபாண்டமான ஒரு செயற்பாடு இவற்றையும் கருத்திற்கொள்ளும் சட்டம் உருவாக்கப்படல் வேண்டும்."" என்றார்.

இக் கலந்துரையாடலில் ஆய்வறிக்கை தொடர்பாக பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த றோகண ஹெட்டியாராச்சி மற்றும் சிறீதரன் சபாநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி.





SHARE