Monday, 11 December 2023

மின்சார கட்டணம் குறைப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!!

SHARE

ஜனவரி மாதம் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியுள்ளார்.

கடந்த நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி மூலம் மின்சார சபைக்கு அதிக நன்மைகள் கிடைத்துள்ள நிலையில், இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண திருத்தமானது ஏப்ரல் மாதமே முன்னெடுக்கப்படவிருந்த போதும், தொடர் மழை காரணமாக ஜனவரி மாதத்திலேயே இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த திருத்தத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
SHARE