பழைய தோற்றத்தில் விஜய்..!!!
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள்செலவில் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
தாய்லாந்தில் வெங்கட்பிரபு பிறந்தநாளுக்கு முன்பாக முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யின் பழைய தோற்றத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் பகவதி, யூத் படத்தில் இருந்த விஜய் தோற்றம் இப்படத்தில் 10 நிமிட காட்சியாக இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.